Tuesday 7th of May 2024 12:24:27 AM GMT

LANGUAGE - TAMIL
சகல வகையிலான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளை கடந்து ரோஸ் ரெய்லர் சாதனை!

சகல வகையிலான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளை கடந்து ரோஸ் ரெய்லர் சாதனை!


சர்வதேச அளவிலான மூன்று வடிவங்களிலும் 100 போட்டிகளை கடந்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் ரோஸ் ரெய்லர் இந்தியாவுடனான இன்றைய டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதன் மூலம் நிகழ்த்தியுள்ளார்.

இன்று வெலிங்டனில் தொடங்கிய இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ரோஸ் ரெய்லருக்கு 100 வது டெஸ்ட் ஆக அமைந்துள்ளதையடுத்து இந்த சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

ஏற்கனவே 231 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஸ் ரெய்லர் நடந்து முடிந்த இந்திய அணியுடனான ரீ-20 தொடரில் 100 வது ரீ-20 போட்டியை கடந்திருந்தார். அந்த அடிப்படையில் சர்வதேச ரீதியிலான மூன்று வகை கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளை கடந்த முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையை நியூசிலாந்தின் ரோஸ் ரெய்லர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE